காலி பணியிடங்களை நிரப்புங்கள் திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
தமிழக அரசு துறைகளில், 12 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாதமும், ஆயிரக்கணக்கானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. அவற்றை நிரப்பவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு முன்வர வேண்டும்.
குறிப்பாக, தமிழக மின் வாரியத்தில் மட்டும், 65,000 காலி பணியிடங்கள் உள்ளன. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், தட்டச்சு பணிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர்.
மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், 'கேங்மேன்' பணியாளர்களாக உள்ள 5,443 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.
அரசு துறைகளில் காலியிடங்கள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது