10ம் வகுப்பு சமூக அறிவியலில் ஒரு மதிப்பெண் இலவசம்

சென்னை: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில், ஒரு மதிப்பெண் கேள்விக்கு, தவறான விடை அளிக்கப்பட்டிருந்ததால், அந்த கேள்விக்கு பதில் எழுதிய, அனைத்து மாணவர்களுக்கும், ஒரு மதிப்பெண் வழங்க, தேர்வுத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

சமூக அறிவியல் பாடத்தேர்வில், ஒரு மதிப்பெண்ணுக்கான பொருத்தமான விடை தேர்வு செய்யும் வினாக்களில், நான்காம் வினாவுக்கு, தவறான விடை இடம் பெற்றிருந்தது.

விடை திருத்தும் பணி மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள், தேர்வுத்துறை கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆலோசனைக்குப் பின், அந்த வினாவுக்கு விடையளித்த அனைவருக்கும், கருணை மதிப்பெண்ணாக ஒரு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை அனுமதி அளித்தது.

Advertisement