பெண்ணிடம் 5 சவரன் நகை நுாதன மோசடி :வாலிபருக்கு வலை

புதுச்சேரி: பெண்ணிடம் 5 சவரன் நகையை வாங்கிச்சென்று மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அருகேயுள்ள சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் அன்பரசன், தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி எஸ்தர், 27. இவர் கடந்த 2016ம் ஆண்டு முதலியார்பேட்டை மெடிக்கல் லேப்பில் வேலை செய்தபோது கடலுாரைச் சேர்ந்த விபின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபின் நேற்று எஸ்தரை தொடர்பு கொண்டு, தனது தாய் பெயரில் அடகு வைத்து உள்ள நகையை மீட்க, எஸ்தர் நகையை கேட்டுள்ளார். இதையடுத்து, எஸ்தர் வீட்டில் இருந்த தனது 5 சவரன் நகையை எடுத்துக்கொண்டு , ஸ்கூட்டியில் முருங்கப்பாக்கம் வந்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து ஒரே பைக்கில் எஸ்தர், விபின் இருவரும் கடலுார் சாலை, அந்தோனியர் ஆலயம் அருகே வந்துள்ளார். அப்போது, விபின் நகைகளை அடகு வைத்து விட்டு, பணத்தை கொண்டு வருவதாக கூறி, எஸ்தரிடம் இருந்த 5 சவரன் நகைகளை வாங்கி சென்றுள்ளார்.

ஆனால், அதன் பின் விபினை காணவில்லை. அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

எஸ்தர் அளித்த புகாரின் பேரில், முதலியார் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement