காரை ஏற்றி பவுன்சரை கொலை செய்ய முயற்சி தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது

புதுச்சேரி: ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் பவுன்சர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் வசந்தராமன், 22; தனியார் ரெஸ்டோ பாரில் பவுன்சராக வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு வசந்தராமன் வேலை முடிந்து, தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, பெருமாள் கோவில் வீதி சந்திப்பில் வந்தபோது, பின்னால் வந்த கார் வசந்தராமன் பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்து காயமடைந்த வசந்தராமனை, காரில் சென்றவர்கள் காரை நிறுத்தி பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.
வசந்தராமன் அளித்த புகாரின் பேரில், கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், ரெஸ்ட்டோ பாரில் அன்று இரவு 5 நபர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டபோது, அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனால், கோபமடைந்த அவர்கள் பாரில் இருந்து பைக்கில் வெளியே வந்த வசந்தராமனை, காரில் பின்தொடர்ந்து சென்று கொலை செய்யும் நோக்கில் காரை பைக் மீது மோதியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வழக்கு பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, எஸ்.பி., ரகுநாயகம் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், பவுன்சரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றது கன்னியாகுமரி, இடைக்கோட்டை சேர்ந்த சைலஸ் மகன் ஸ்டார்வின், 29; செல்வம் மகன் சிபின், 32; சென்னை, ராமபுரத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் சுதாகர், 35; ராஜஸ்தானை சேர்ந்த அபி ேஷக், ராகுல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் ஸ்டார்வின், சிபின், சுதாகர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், கொலை முயற்சிக்கு பயன்படுத்திய இனோவா கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின், கைது செய்யப்பட்ட 3 பேரும், புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ராஜஸ்தானை சேர்ந்த இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும்
-
இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
-
மானியம் பெற்றுத்தர லஞ்சம்; கூட்டுறவு சங்க மேலாளர் கைது; ரூ.15.89 லட்சம் பறிமுதல்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு