வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேர்தல் அதிகாரிகள் பெருமிதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதில் வாக்கா ளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றுதல் திருத்தம் செய்வது போன்றவற்றுக்காக வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்காக பூத் லெவல் அதிகாரிகள் 921 பேர் ஈடுபட்டு, வீடு வீடுடாக சென்று விண்ணப்பத்தில் தரப்பட்டுள்ள தகவல்களை சரிப்பார்த்தனர்.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர் பட்டியல் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் அனைத்து ஒட்டுச்சாவடியில் நடத்தப்பட்டது. புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்ப்புக்கு பிறகு புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பெயர், வயது, முகவரியில் மாற்றம் செய்ய விண்ணப்பித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி, வாக்காளர்கள் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. புதுச்சேரியை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 10 லட்சத்து 14 ஆயிரத்து 397 வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் ஆட்சேபனைகள் இருந்தால் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் நிலையில் முறையீடுகள் வரவில்லை. மேலும் கட்சி முகவர்கள் 893 பேரும், தேர்தல் அதிகாரிகளுடன் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி சரியாக நடந்ததாகவும், எவ்வித மேல்முறையீடு வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது