ஒரு சமூகத்தின் முதல்வர் விஜயேந்திரா கடும் தாக்கு

தாவணகெரே: ''முதல்வர் சித்தராமையா பர்தா அணிந்து செல்லும் சூழலுக்கு வந்துவிட்டார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தாவணகெரேவில் நேற்று பா.ஜ., தரப்பில் 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' நடந்தது.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பேசியதாவது:
சித்தராமையா, ஒரு சமூகத்திற்கான முதல்வராக மாறிவிட்டார். அவர் ஒரு ஹிந்து விரோதி. தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை கொள்ளையடித்து வருகிறார்.
சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவாக இருக்கிறார். பர்தா அணிந்து திரியும் சூழலுக்கு வந்துவிட்டார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏழைகள், பால் வாங்க முடியாத சூழலிலும், விவசாயிகள் நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
ஆனால், கர்நாடகாவோ ஊழலில் நாட்டிலே முதலிடத்தில் உள்ளது. ஜாதிவாரி அறிக்கையை வைத்து லிங்காயத், ஒக்கலிகர்கள் இடையே பிரச்னையை உண்டாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். காங்கிரஸ் அரசிற்கு அனைவரும் சேர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது