மஹிந்திரா குழுமத்தில் தலைமை மாற்றம்

மும்பை; மஹிந்திரா குழும நிறுவனங்கள் இடையே, தலைமை பொறுப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'மஹிந்திரா பார்ம் எக்யுப்மென்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த, ஹேமன்த் சிக்கா, தற்போது, 'மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.

வாகனப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த வீஜே நக்ரா, தற்போது, விவசாய இயந்திர வணிகப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், வாகன தொழில்நுட்பம் மற்றும் வாகன மேம்பாட்டுப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த, வேலுசாமி, தற்போது, வாகன வணிகப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement