கன்டினம் கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருகிறது

புதுடில்லி; புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3,650 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, கன்டினம் கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட கன்டினம் கிரீன் எனர்ஜி, கடந்த 2007ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான காற்றாலை, சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்து, வணிக ரீதியாக, தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து அமைத்து வருகிறது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் அமைந்து உள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே தன் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 2,400 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 1,250 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது.
ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையில், 1,100 கோடி ரூபாயை துணை நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்தவும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் பிற தேவைக்கும் பயன்படுத்த உள்ளது.
மேலும்
-
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
-
தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு