' ஜென்சால் மீது நடவடிக்கை'

புதுடில்லி; ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு எதிரான செபியின் உத்தரவை ஆராய்ந்த பின்னர், அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வங்கிகளிடம் இருந்து நிறுவனத்துக்காக பெற்ற கடனை, தன் சொந்த தேவைக்கு பயன்படுத்திய புகாரையடுத்து, ஜென்சால் நிறுவனத்தின் அன்மோல் சிங், புனீத் சிங் ஆகியோர் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட கடந்த வாரம் செபி தடை விதித்தது.

இந்நிலையில், செபியின் உத்தரவை ஆராய்ந்து, கம்பெனிகள் சட்டம் 2013ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement