திருமலை கோவிலில் ஜூலை மாத சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு
சென்னை: திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன.
அவற்றில் வரும், ஜூலை மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு இன்று காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு இன்று மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது.
அங்கப்பிரதட்ஷணம் செய்வதற்கான முன்பதிவிற்கு நாளை காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு, மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது.
ஜூலை மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு வரும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவு துவங்குகிறது.
மேலும்
-
ஏப்.25ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; இ.பி.எஸ். அறிவிப்பு
-
சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்
-
தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
'டாஸ்மாக்' மது விற்பனையால் அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய்!
-
சித்ரா பவுர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு