மனைவியை கொன்று புதைக்க முயன்ற கணவர்

துாத்துக்குடி : குடும்பத் தகராறில், மனைவியை கொன்று புதைக்க முயன்ற தொழிலாளியை, போலீசார் தேடி வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், நம்மாழ்வார்நகரை சேர்ந்தவர் மரியசாமுவேல், 60. இவரது மனைவி ஜோஸ்பின், 57. இரு மகன்களில், ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், மற்றொருவர் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளனர்.

தம்பதியிடையே இருந்த தகராறு காரணமாக, நேற்று அதிகாலை வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி கழுத்தை, கணவர் மரியசாமுவேல், திடீரென அறுத்து கொலை செய்தார். பின், உடலை ஊருக்கு வெளியே உள்ள பாலத்தின் கீழே புதைக்க துாக்கி சென்றார்.

ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலைமறைவானார். ஜோஸ்பின் தம்பி ஜான் போஸ்கோ, தன் அக்காவை தேடி பார்த்தபோது, அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்து அலறினார்.

ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மரியசாமுவேலை தேடுகின்றனர்.

Advertisement