காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

2

ஜெய்ப்பூர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். தற்போது ஜெய்ப்பூரில் அவர் தங்கி உள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் உஷாவும் கடும் கண்டனம் தெரவித்து கொள்கிறோம். இந்த நாடு மற்றும் மக்களின் அழகையும் அன்பையும் அனுபவித்து வருகிறோம். இந்த கொடூரமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் வான்ஸ் கூறியுள்ளார்.

Advertisement