குதிரை மிரண்டதில் சிறுவன் படுகாயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி சாலையில் மதுரையை சேர்ந்த ஜோயல் கேப்சன் 9, வயது சிறுவன் பெற்றோருடன் குதிரை சவாரி செய்தார்.

அருகாமையில் இருந்த குதிரை மிரளவே இக்குதிரை ஓட்டம் எடுத்தது வெகு தூரம் மிரண்ட குதிரை செவன் ரோடு அருகே எதிரே வந்த வாகனம் மீது மோதி சிறுவனை தூக்கி எறிந்தது.
படுகாயம் அடைந்த ஜோயல் காப்சனை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றுள்ள இச்சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement