ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து 8 பேர் பலி; 6 பேர் படுகாயம்

2

போபால்: ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.


ம.பி.,யின் ஜபல்பூர் மாவட்டத்தை பலர் இரண்டு இரண்டு கார்களில் தாமோ மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று கொண்டு இருந்தனர். அதில் ஒரு காரில் 15 பேர் பயணித்தனர். தாமோ மாவட்டத்தில் வறண்ட நதியின் மேல் இருந்த பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.


அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement