இதயம் வலிக்கிறது... * விளையாட்டு நட்சத்திரங்கள் கண்டனம்

புதுடில்லி: ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் பலியாகினர். இதற்கு இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சச்சின் (முன்னாள் கிரிக்கெட் வீரர்): பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துப் பார்க்க முடியாத சோதனையான சூழ்நிலையில் இருப்பர். இக்கட்டான நேரத்தில் இந்தியாவும், உலகமும் அவர்களுக்கு துணையாக நிற்கும்.
கோலி (கிரிக்கெட்): பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு அமைதியும், மன வலிமையும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
சிந்து (பாட்மின்டன்): பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து என் இதயம் வலிக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்த அவர்களது துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையை இழந்து விட வேண்டாம்.
ஸ்ரீஜேஷ் (ஹாக்கி முன்னாள் கோல்கீப்பர்): தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. நீதி கிடைக்க வேண்டும். பஹல்காமிற்காக நம் இதயங்கள் ரத்தம் சிந்துகின்றன.
நிஹாத் ஜரீன் (குத்துச்சண்டை): அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், மனிதகுலத்திற்கு எதிரானவர்கள். கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறோம்.
விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை): அமைதியை குலைக்க விரும்புபவர்களின் திட்டம் ஒருபோதும் வெற்றி அடையாது. இந்திய படையினர் சரியான பதிலடி கொடுப்பர்.
ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி (கிரிக்கெட்): சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. உடனே சிலர்,' விளையாட்டில் அரசியல் வேண்டாம், என்றனர். நமது மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது, அவர்களுடன் விளையாட வேண்டுமா. பாகிஸ்தானுடன் எவ்வித விளையாட்டும் இனி வேண்டாம்,'' என்றார்.
தவிர, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்கள் அபினவ் பிந்த்ரா (துப்பாக்கிசுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சுப்மன் கில், ராகுல், சுழல் ஜாம்பவான் கும்ளே, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
கல்வித்துறை ஒப்பந்த வாகனங்களுக்கு வாடகை 'தாராளம்': புதிதாக கொள்முதல் செய்யாத பின்னணி என்ன
-
மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை
-
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி
-
வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு 'பூஜ்யம்
-
ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா: பணியாளர்கள் வேலைநிறுத்தம்