பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு! தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
சவுதி
அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கடும் கோபத்துடன் இந்தியா
திரும்பிய பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு நடந்த மத்திய அமைச்சரவை
பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
இந்தியா -- பாக்., இடையே, 1960-ல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது
பாக்., உடனான வாகா -- அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த யாருக்கும், இந்தியாவில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா -- அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்திருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி, மே 1ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்
'சார்க்' கூட்டமைப்பு நாடுகளுக்கான 'விசா விதி விலக்கு' பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும்
டில்லியில் உள்ள பாக்., துாதரகம் செயலற்றதாக அறிவிக்கப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படையினர் உட்பட அனைத்து பாக்., அதிகாரிகளும் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்
பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகம் உடனடியாக மூடப்படுகிறது. அங்குள்ள ராணுவ, கடற்படை, விமானப்படை ஆலோசகர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகள் அனைவரும் நாடு திரும்ப உத்தரவிடப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர் கருத்து (7)
thehindu - ,இந்தியா
23 ஏப்,2025 - 23:56 Report Abuse

0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
23 ஏப்,2025 - 23:51 Report Abuse

0
0
Reply
Ram - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 23:42 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
23 ஏப்,2025 - 23:42 Report Abuse

0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
23 ஏப்,2025 - 23:07 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
23 ஏப்,2025 - 22:47 Report Abuse

0
0
Reply
sundar - xhennai,இந்தியா
23 ஏப்,2025 - 22:26 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கல்வித்துறை ஒப்பந்த வாகனங்களுக்கு வாடகை 'தாராளம்': புதிதாக கொள்முதல் செய்யாத பின்னணி என்ன
-
மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை
-
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி
-
வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு 'பூஜ்யம்
-
ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா: பணியாளர்கள் வேலைநிறுத்தம்
Advertisement
Advertisement