தமிழகத்தின் வித்யா 'தங்கம்': பெடரேஷன் தடகள ஓட்டத்தில்

கொச்சி: பெடரேஷன் தடகளத்தின் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா தங்கம் வென்றார்.
கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 56.04 வினாடியில் கடந்த தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்திற்கான தகுதி இலக்கை (57.80 வினாடி) விட வேகமாக வந்த வித்யா, இத்தொடரில் தனது 2வது பதக்கத்தை பெற்றார். ஏற்கனவே இவர், 400 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றிருந்தார். தவிர இவர், பெடரேஷன் சீனியர் தடகளத்தில் சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன் 2019ல் பாட்யாலாவில் நடந்த இப்போட்டியில் இந்தியாவின் சரிதாபென் கயக்வாட் இலக்கை 57.21 வினாடியில் கடந்தது சாதனையாக இருந்தது.
வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை கேரளாவின் அனு (58.26 வினாடி), தமிழகத்தின் அஸ்வினி (ஒரு நிமிடம், 02.41 வினாடி) வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை குமாரி (ஒரு நிமிடம், 02.78 வினாடி) 4வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் கர்நாடகாவின் யாஷாஸ் (49.32 வினாடி) தங்கம் வென்றார். ஜே.எஸ்.டபிள்யு., அணியின் சுபாஸ் தாஸ் (50.11 வினாடி), குஜராத்தின் ருசித் மோரி (51.08 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
மஞ்சு 'தங்கம்': பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் பைனலில் மத்திய பிரதேசத்தின் மஞ்சு அஜய் யாதவ் (10 நிமிடம், 34.08 வினாடி) தங்கம் வென்றார். ராஜஸ்தானின் நிகிதா (10 நிமிடம், 51.96 வினாடி), ஹரியானாவின் சன்சல் (11 நிமிடம், 10.40 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
மேலும்
-
துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
-
சிறு கனிம நில வரி உயர்வு ரத்து செய்யணும்: பன்னீர்
-
அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?
-
மூதாட்டியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி
-
புருலியா, ஹவுரா ரயில்களில் தொடர் கஞ்சா, குட்கா கடத்தல்
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக சென்னைக்கு டூவீலரில் ஊர்வலம் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவு