'அதிகாரிகளுக்கா ஓட்டு போட்டாங்க?'

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'போட்ட ரோட்டுக்கு மறுபடியும் பூமிபூஜை போடுகிறார் அமைச்சர் மூர்த்தி. அவர்கிட்ட இந்த ரோட்டுக்கு ஏற்கனவே பூமிபூஜை போட்டாச்சுன்னு அதிகாரிகள் சொல்லிருந்தா போயிருப்பாரா... அவர்கிட்ட அதிகாரிகள் சொல்லல... கூட்டிட்டு போய் அமைச்சரை மாட்டி விட்டுட்டாங்க.
'இந்த மாதிரி அதிகாரிகள் சொல்லித்தான், நானும் வைகை அணையில் தெர்மோகோல் போட்டேன்... அதிகாரிகள் சொல்லித்தானே அமைச்சர்கள் போறாங்க. தெர்மோகோல் விஷயத்துல என்னை மட்டும் ஓட்டு னீங்க; இப்ப முடிஞ்சா அமைச்சர் மூர்த்தியையும் ஓட்டுங்க...' என்றார்.
இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... அதிகாரிகளுக்கா மக்கள் ஓட்டு போட்டாங்க... அரசியல் வாதிகளுக்கு தானே போட்டாங்க... அப்ப அவங்களை தானே ஓட்ட முடியும்...' என, பேசியபடியே கிளம்பினார்.
மேலும்
-
டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
-
சிவில் சர்வீஸ் தேர்வு வெற்றி தனிநபர் சாதனையல்ல
-
வாரவிடுமுறை அளிக்கப்படுகிறதா; போலீசிடம் நீதிபதி கேள்வி வார விடுமுறை பற்றி தெரியாது; போலீஸ்காரர் பதில்
-
பாக்.,கை பயங்கரவாத இயக்கமாக அறிவியுங்க: கபில் சிபல்
-
கடத்தல்காரர்கள் எனக்கு தந்தது ஒரு உடை, ஒரு வேளை சாப்பாடு; மீட்கப்பட்ட மதுரை தொழிலதிபர் பேட்டி
-
இரு சிறுமியருக்கு 'தொல்லை' 61 வயது டெய்லர் கைது