காலிறுதியில் ராமநாதன் ஜோடி

வாங்சு: சாலஞ்சர் டென்னிசின் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது.
தென் கொரியாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சீனாவின் ஆவோரன் வாங் ஜோடி, பிரான்சின் லுகா சான்செஸ், எஸ்கோபியர் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை ராமநாதன் ஜோடி 6-2 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, அடுத்த செட்டையும் 6-0 என எளிதாக வசப்படுத்தியது. 49 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன் ஜோடி 6-2, 6-0 என நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் ஆஸ்திரேலியாவின் பிளேக், அமெரிக்காவின் ரீஸ் ஜோடியை இன்று சந்திக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பிரதமருக்கு முஸ்லிம்களின் செய்தி: சோனியா மருமகன் சர்ச்சை
-
ரூ.10 லட்சத்துக்கு அதிகமான விலையில் வாங்கும் பொருட்களுக்கு இனி 1 % வரி
-
வெளிநாட்டில் உயர்கல்வி பெறுவதில் தென்மாவட்ட பங்களிப்பு 'பூஜ்யம்
-
ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கு 'எண்ட் கார்டு' இல்லையா: பணியாளர்கள் வேலைநிறுத்தம்
-
டி.ஆர்.எப்., பயங்கரவாதி காஷ்மீரில் சுற்றிவளைப்பு
Advertisement
Advertisement