ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு

1


புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து பேசினர்.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகள், தாக்குதலுக்கு பிந்தைய சூழ்நிலை குறித்து அம்மாநில கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமித்ஷா டில்லி திரும்பினார்.


இந்நிலையில் ஜனாதிபதி மாளிகை சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஜனாதிபதி திரவபதிமுர்முவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காஷ்மீரில் நடந்த தாக்குதல் மற்றும் அங்குள்ள நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement