மாட்ரிட் ஓபன்: அல்காரஸ் விலகல்

மாட்ரிட்: ஸ்பெயினின் அல்காரஸ், காலில் ஏற்பட்ட காயத்தால் மாட்ரிட் ஓபனில் இருந்து விலகினார்.

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 21, பங்கேற்க இருந்தார். சமீபத்தில் முடிந்த பார்சிலோனா ஓபன் பைனலின் போது இவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத இவர், மாட்ரிட் ஓபனில் இருந்து விலகினார். நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அல்காரஸ், மாட்ரிட் ஓபனில் 2 முறை (2022, 2023) கோப்பை வென்றிருந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், டென்மார்க்கின் கிளாரா டாசன் மோதினர். அபாரமாக ஆடிய பென்சிக் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement