பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்று தான்: பெண்டகன் முன்னாள் அதிகாரி

4


வாஷிங்டன்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் ஒன்று தான் என பெண்டகன் முன்னள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.


பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒசாமா பின்லாடன் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இடையே ஒரே வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஒசாமா பின்லாடன் குகையில் வாழ்ந்தார். அசிம் முனீர், மாளிகையில் வசிக்கிறார். அதனைதாண்டி இருவரும் ஒரே மாதிரியானவர்கள். அவர்களின் முடிவும் ஒரே மாதிரி இருக்கும்.


பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி, பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடாகவும், அசிம் முனீரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்.


பஹல்காம் தாக்குதலை ஏதேச்சையானது என பாசாங்கு செய்யக்கூடாது. அது பன்றிக்கு உதட்டுச்சாயம் போட்டது போன்று ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிப்பு ஆகும். தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும். பில் கிளிண்டன் இந்தியா சென்ற போது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதேபோல் துணை அதிபர் ஜேடி வான்சின் இந்திய பயணத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் விரும்புவது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement