சீக்கிய யாத்ரீகர்களுக்கு விலக்கு: பாகிஸ்தான் தந்திரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ள அந்நாடு, சீக்கியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உள்ளது. இதன் பின்னணியில் அந்நாட்டிடம் உள்ள பிரிவினைவாத சதி அம்பலமாகி உள்ளது.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறப்பிடம் என்பதால், பாகிஸ்தானில் உள்ள ஜனமஸ்தான் நான்கானா சாஹிப் குருத்வாராவுக்கு ஆண்டுதோறும் சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். மேலும் சீக்கிய மதம் தொடர்பான சில இடங்கள் பாகிஸ்தானில் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் 3 ஆயிரம் சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்க வருகிறது.
அதேநேரத்தில் சீக்கியர்களுக்கு என தனி நாடு கோரி காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனால், இவர்கள் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்த படி இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு மறைமுக யுத்தம் நடத்தி வரும் பாகிஸ்தான், இந்தியாவிற்கு மேலும் பிரச்னைகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகளையும் ஆதரித்து வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தானே செய்து கொடுக்கிறது.
இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நினைத்து பாகிஸ்தானும், இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதில் சீக்கியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து உள்ளது.
இதன் பின்னணியில் உள்ள பாகிஸ்தானின் தந்திரம் குறித்து வெளியாகி உள்ள தகவல்: இந்தியாவில் இருந்து ஏராளமனோர் தொழில், கல்வி, குடியேற்றம் என ஏராளமான வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆனால், அப்படி செல்பவர்கள் வறுமையில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு செல்வது என்பது அரிதான ஒன்று. சீக்கியர்கள் மட்டுமே ஆன்மிக யாத்திரையாக பாகிஸ்தான் செல்கின்றனர். தங்களது பயணம் முடிந்த உடன் அவர்கள் தாங்களாகவே இந்தியா திரும்பி விடுவர். ஆனால், தற்போது அந்நாட்டில் இருந்து வெளியேற சீக்கியர்களுக்கு விலக்கு அளித்துள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. தற்போது, அவர்களையும் வெளியேற உத்தரவிட்டால் விஷயம் வேறு மாதிரி ஆகிவிடும். காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என அந்நாடு நினைக்கலாம். இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
அக் ஷய திருதிக்கு தங்கம் வாங்க முன்பதிவு விறுவிறு; விலை அதிகரித்தும் மவுசு குறையல
-
முதல்வர் ஸ்டாலினிடம் ராஜ்யசபா சீட் கேட்டாரா வைகோ?
-
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
-
பிரதமர் மோடி மே 3ல் சென்னை வருகை?
-
மணல் மூட்டை அடுக்கி ரவுண்டானா நெ.சா.துறையினர் சோதனை முயற்சி
-
இன்று இனிதாக.... (25.04.2025) திருவள்ளூர்