ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை:'பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை, புதுப்பிக்க தவறியவர்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் படிக்கும், 5 - 7 வயதுள்ள மாணவர்களுக்கு, முதலாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். தவறியவர்கள், 8 - 14 வயதுக்குள் புதுப்பிக்க வேண்டும். மீண்டும், 15 - 17 வயதில், இரண்டாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை, அந்தந்த பள்ளியிலேயே செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாத மாணவர்களை, தங்களின் அருகில் உள்ள, இ - சேவை மையங்களுக்கு அழைத்து சென்று, கோடை விடுமுறையில் புதுப்பிக்கும் பணிகளை, பெற்றோர் செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பின் போது, அனைத்து மாணவர்களுக்கும், உரிய ஆதார் எண் பெறும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.