பாண்டியாறு - மாயாறு இணைப்பு தண்ணீர் பஞ்சம் மாயமாகும்
பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரி, அனைத்து அரசியல் கட்சி களின் கவனம் ஈர்க்கும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மனு வழங்கும் இயக்கத்தை உழவர் சிந்தனை பேரமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், தொழில் வளர்ச்சிக்கு இணையாக, விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நீர் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் மத்தியில் மேலோங்க துவங்கியிருக்கிறது.
கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டு கடந்த கோரிக்கையான, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின், நீர் வளம் சார்ந்த விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
வலுப்பெறும் கோரிக்கை
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலியில் உருவாகும் பாண்டியாறு நீரை முதுமலை தெப்பக்காடு மாயாறுடன் இணைப்பதன் வாயிலாக, பவானி ஆற்றில் ஆண்டு முழுக்க நீர் வரத்து இருக்கும்; இக்கோரிக்கை, தற்போது வலுப்பெற துவங்கியிருக்கிறது.
உழவர் சிந்தனை பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:
பவானி ஆற்றின் உபரிநீரை தான், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்திற்கென எடுக்க முடியும். அதன்படி, 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் உபரிநீர் கிடைக்கும். அத்திக்கடவு திட்டத்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குளங்களும் நிரம்பி, ததும்பவில்லை; சில குளங்கள் தரை தட்டிய நிலையிலும், பாதியளவு நிரம்பிய நிலையிலும் தான் உள்ளன.
ஆறு வற்றவே கூடாது
ஆண்டு முழுக்க பவானி ஆற்றில் நீர் வரத்து இருந்தால் தான், இத்திட்டம் சார்ந்த குளம், குட்டைகளுக்கு தடையின்றி நீர் செறிவூட்ட முடியும். அந்த அடிப்படையில், தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் வழங்கிய யோசனைப்படி, பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டு முழுக்க பவானி ஆற்றில் நீர் வரும். அத்திக்கடவு திட்டம் சார்ந்த குளம், குட்டைகளுக்கு தடையின்றி நீர் நிரப்ப முடியும்.
கட்சித் தலைவர்களை சந்திக்க திட்டம்
இத்திட்டத்தின் முக்கியத்துவம், திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து மனு வழங்கவுள்ளோம்.
அந்த வகையில் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளோம்.
பிற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மனு வழங்கவுள்ளோம். அரசியல், கட்சி பாகுபாடினின்றி திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இந்தியா - பாக்., போராக மாறக்கூடாது: எச்சரிக்கிறார் திருமாவளவன்
-
பெஞ்சல்' நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள்... பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
-
புரவலர் சேர்க்கை
-
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு