ஊக்குவிப்பால் வளர்கிறது தமிழ்

தமிழில் ஆளுமையும், புலமையும் பெற்றவர்கள் மட்டுமின்றி, தமிழ் மீது பாசமும், நேசமும் கொண்டவர்கள் கூட தமிழ் வளர்க்க தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
அந்த வரிசையில், திருப்பூர், தோட்டத்துப்பாளையம் பகுதியில் 'தமிழ் மாருதம்' மக்கள் அமைப்பு என்ற பெயரில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்து வருகின்றனர், இளைஞர்கள் சிலர்.
''நான் உட்பட எங்கள் அமைப்பில் உள்ளவர்கள், தமிழ் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே. மாணவர்கள் மத்தியில் தமிழ் பற்றும், இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பும் வழங்க வேண்டும் என்பதே, எங்களின் நோக்கம்' என்ற அறிமுகத்துடன் தங்களின் செயல்பாட்டை விளக்கினார் அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன்.
மேலும், அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், சித்திரை முதல் நாளில், மாணவ, மாணவியருக்கு இடையே பேச்சு, கட்டுரை போட்டி நடத்தி, பரிசு வழங்கி வருகிறோம். இளம் எழுத்தாளர்களின் சிறுகதை, கவிதை தொகுப்புகளை புத்தகமாக வெளியிட்டு வருகிறோம்.
கடந்த, ஏழு ஆண்டாக 'தமிழ் திருவிழா' என்ற பெயரில் தமிழ் கலாசார கலைகளான தப்பாட்டம், நாதஸ்வாரம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பட்டிமன்றம் நடத்தி வருகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகள்மாணவ, மாணவியர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை துாண்டுகிறது. புத்தக வாசிப்பின் மீது நேசத்தையும், நிறைய படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது.
கொரோனாவுக்கு முன்பு வரை 'கவி ஞாயிறு' என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிறன்று, மாணவ, மாணவியரின் கவிதை திறமையை வளர்க்க நிகழ்ச்சி நடத்தி வந்தோம். ஆண்டு தோறும் பூலுவப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.
வங்கி தேர்வுக்கு அகாடமியில் இணைந்து பயின்ற வசதி குறைந்த மாணவனுக்கு உதவி செய்தோம்; அவரும் தேர்வில் வெற்றி பெற்று, வங்கிப்பணியில் இணைந்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்
-
பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பி.எஸ்.எப்., வீரரை மீட்க தீவிர முயற்சி
-
இனி பயங்கரவாதிகள் தான் பயந்து நடுங்க வேண்டும்! 'பாதுகாப்பான இந்தியா' அமைய பல்லவி மஞ்சுநாத் விருப்பம்
-
பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பி.ஓ.கே.,
-
'கொடுமைக்கும் எல்லை உண்டு' குமுறுகிறார் வினய் குல்கர்னி
-
தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்