சேப்பாக்கத்தில் 'ரோபோ டாக்'

சென்னையில் நேற்று சேப்பாக்கில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இடையிலான போட்டியில் 'சம்பக்' என்று ரசிகர்களால் உச்சரிக்கப்படும் 'ரோபோ டாக்' ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ரோபோ டாக் என்பது ஓரு உயர்ரக கேமராவை சுமந்தபடி மைதானத்தின் பவுண்டரி எல்லையில் நடக்கும் நிகழ்வுகளை வெகு துல்லிதமாக படம்பிடிக்கும் தொழில் நுட்பம் கொண்ட ரிமோட் முறையில் இயங்கும் கேமாவாகும்.இந்த ரோபோ டாக் ஒரு நாய் நடப்பது போலவே நடக்கும், துல்லிக்குதிக்கும், முன்னங்கால்களை உயர்தியபடி எழுந்து நிற்கும், நாயின் பார்வை கோணத்தில் காட்சிகளை பதிவு செய்யும்.
நேற்றைய போட்டியின் ஆரம்பத்தில் இரு அணி வீரர்கள் டாஸ் போடுவதற்கான காயினை சுமந்து கொண்டு சென்றது பின் அவ்வப்போது பவுண்டரி பகுதியில் வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
எவ்வளவு அடித்தாலும் இவன் அழமாட்டான் என்பது போல சென்னை அணி எத்தனை முறை தோற்றாலும் அதனை கண்கொண்டு பார்த்தே தீர்வது என்பது போல ரசிகர்கள் தோனி அணியும் பனியனுடன் பார்வையாளர்கள் பகுதியை நேற்றைய போட்டியின் போதும் நிறைத்திருந்தனர்.
பொதுவெளியில் அதிகம் பார்க்கமுடியாத நடிகரான அஜித் தனது மனைவியுடன் போட்டியை பார்க்கவந்திருந்தார், பக்கத்து கேபினில் சிவகார்த்திகேயன் உட்கார்ந்திருந்தார், போட்டி போராடித்த போது கேமராக்கள் இந்த நட்சத்திரங்களை போகஸ் செய்து உற்சாகத்தை ஏற்படுத்தியது.
உற்சாகம் என்ன உற்சாகம் சென்னை ரசிகர்கள் என்றால் காது கிழிய விசிலடிப்பர் என்று அனைவருக்கும் தெரிந்ததே நேற்று தங்களது அபிமான நட்சத்திரங்களை பார்க்கும் போதும் அதிகம் விசிலடித்து மகிழ்ந்தனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு நடுவே களமிறங்கினார் தோனி,ரசிகர்கள் அவரை மொபைல் போன் டார்ச் லைட்டை ஒரு சேர ஒளிர்வித்து வரவேற்றனர் இருந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை வந்த வேகத்திலேயே திரும்பினார்.
எங்கே சென்னை அணி ஜெயித்துவிடுமோ என்று நினைத்த வேளையில் ஒவ்வொரு ரன்னாக பொறுமையாக சேர்த்து ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது.அடுத்த மேட்ச்ல பார்த்துக்கலாம் என்பது போல ரசிகர்கள் மஞ்சள் பனியனை உதறி தோளில் போட்டுக்கொண்டு சென்றனர்.
-எல்.முருகராஜ்.


மேலும்
-
உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் பேட்டிங்
-
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?
-
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
-
இனி பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க முடியாது: விஜய்