போதைப்பொருள் விற்ற வழக்கில் நைஜீரிய நபருக்கு 4 ஆண்டு சிறை

பெங்களூரு : போதைப்பொருள் வழக்கில், நைஜீரியா நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெங்களூரின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பெங்களூரு, ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்டின், மூன்றாவது பிளாக்கில், பி.டி.ஏ., பூங்கா அருகில் போதைப்பொருட்கள் விற்பதாக, 2022 அக்டோபர் 9ம் தேதியன்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பானஸ்வாடி போலீசார் உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். போதைப்பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்த கிங்ஸ்லே, 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

குறைந்த விலைக்கு போதைப்பொருள் வாங்கி வந்து, பெங்களூரில் பல்வேறு இடங்களில், மென்பொறியாளர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு அவற்றை விற்றது, விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணை முடித்த போலீசார், பெங்களூரின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில், கிங்க்ஸ்லேவின் குற்றம் உறுதியானது.

அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி விஜய தேவராஜ் அர்ஸ், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement