சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 500 பேர் கைது

ஆமதாபாத்: குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறிய, வங்கதேசத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் குடும்பமாக நுழையும் நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
அந்த நபர்களை கைது செய்யும் பணியில், மத்திய, மாநில அரசுகள் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் உரிய ஆவணங்கள இன்றி வசித்து வந்த வங்கதேசத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விரைவில் வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.










மேலும்
-
பஹல்காமின் ஹீரோவான குதிரை உரிமையாளர் சங்க தலைவர்
-
உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி 201 ரன்கள் குவிப்பு
-
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?
-
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை