லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் சஸ்பெண்ட்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராஜிவிடம், வீட்டுமனையை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்வதற்காக, கடந்த 23ம் தேதி 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, விழுப்புரம் நில அளவையர் ஸ்டாலின், 27; நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன், 54; ஆகியோர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் ஸ்டாலினை, நில அளவைத் துறை உதவி இயக்குனர் ஜெயசங்கரும், கிராம உதவியாளர் கிருஷ்ணனை, தாசில்தார் கனிமொழியும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

Advertisement