த.வெ.க., பூத் கமிட்டி மாநாடு; கோவை வந்தார் விஜய்!

13

கோவை: த.வெ.க., பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார்.


@1brகோவையில் த.வெ.க., வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு இன்றும்(ஏப்.26), நாளையும் (ஏப்27) என இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கோவை வந்துள்ளார்.


கோவை விமான நிலையம் வந்திருந்த அவரை, அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். கைகளில் வரவேற்பு பதாகைகளை வைத்திருந்த ரசிகர்களில் ஒருபிரிவினர், விஜயை பார்த்து கைகளை அசைத்தும், குரல் எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


அதன் பின்னர், நடிகர் விஜய் நேரடியாக பிரபல தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றார். மதியம் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

Advertisement