அரையிறுதியில் இந்திய ஜோடி * டேபிள் டென்னிஸ் தொடரில்

டுனிஸ்: உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஷா ஜோடி, நெதர்லாந்தின் ரெமி வெய்ல், டுனிசியாவின் வாசிம் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 11-6, 11-8, 11-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி 3-2 என (11-6, 2-11, 16-18, 11-2, 11-4) சக இந்திய ஜோடி சத்யன் ஸ்ரீஜா ஜோடியை வீழ்த்தியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா, 1-3 என (11-8, 6-11, 7-11, 9-11) ஜெர்மனியின் சபைன் வின்டரிடம் வீழ்ந்தார். பெண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி, 1-3 என (6-11, 10-12, 12-10, 4-11) சீனாவின் டிங் இ, ஹு இ ஜோடியிடம் தோற்றது.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், 1-3 என (11-9, 9-11, 8-11, 1-11) ஜப்பானின் ஹிரோட்டாவிடம் தோல்வியடைந்தார்.

Advertisement