இந்தியாவுக்கு 43 பதக்கம்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 43 பதக்கம் உறுதியானது.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. 17 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி போட்டி நடந்தது.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், ஜோர்டானின் அயா அல்ஹாசனாத் மோதினர். அபாரமாக ஆடிய சிம்ரன்ஜீத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
பின், 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஹிமான்ஷி, பாலஸ்தீனத்தின் பராஹ் அபூ லைலாவை வென்றார்.
ஆண்களுக்கான காலிறுதியில் இந்தியாவின் அமன் சிவாச் (63 கிலோ), தேவன்ஷ் (80 கிலோ) வெற்றி பெற்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 43 பதக்கம் உறுதியானது. இதில் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 25 பதக்கம், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 18 பதக்கம் அடங்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement