கால்பந்து: அரையிறுதியில் மோகன் பகான்

புவனேஸ்வர்: இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசனில் 15 அணிகள் களமிறங்கின. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்று நடந்த முதல் காலிறுதியில் மோகன் பகான், கேரளா அணிகள் மோதின.
போட்டியின் 25வது நிமிடத்தில் மோகன் பகான் வீரர் சஹால் அப்துல் சமத், ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 51வது நிமிடம் முகமது பந்தை, கேரளா கோல் ஏரியாவுக்குள் தள்ளினார். அங்கு வந்த சுஹைல் அகமது, கோல் கீப்பரை ஏமாற்றி பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் கேரளா அணிக்கு ஸ்ரீகுட்டன் (90+5 வது) ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement