செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்

வார்சா: போலந்தில் கிராண்ட் செஸ் தொடர் நேற்று துவங்கியது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' செஸ் நடக்கிறது. முதல் போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, முதலில் பின் தங்கினார். பின் வாசியர் செய்த தவறுகளை சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, போட்டியின் 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது போட்டியில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பத்தை எதிர்கொண்டார். இம்முறை வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் (3.0), பிரான்சின் அலிரேசா (3.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (1.0) 8வது இடத்தில் உள்ளார்.

Advertisement