பெண்கள் ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

பெர்த்: முதல் ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 3-5 என, ஆஸ்திரேலியா 'ஏ' அணியிடம் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் மூன்று போட்டிகளில் விளையாடுகிறது.
பெர்த்தில் முதல் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 3-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு மஹிமா டெட் (27 வது நிமிடம்), நவ்னீத் கவுர் (45வது), லால்ரெம்சியாமி (50வது) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி சார்பில் நீசா பிளின் (3வது நிமிடம்), ஒலிவியா டவுன்ஸ் (9வது), ரூபி ஹாரிஸ் (11வது), டாட்டம் ஸ்டீவர்ட் (21வது), கேந்திரா பிட்ஸ்பாட்ரிக் (44வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement