கஞ்சா விற்பனை; 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் தெற்கு போலீசார், தென்னம்பாளையம் சந்தை பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது. அதை வைத்திருந்த கருணாகரன், 20, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

l அனுப்பர்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில், பிச்சம்பாளையம் பூம்பாறை பகுதியில் மூன்று பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பன்னீர் செல்வம்,29; ராஜேஷ்குமார் 31 மற்றும் சுந்தரேசன், 20 எனத் தெரிந்தது. அவர்களிடம் 1.200 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement