நடுநிலை விசாரணைக்கு தயார் பாக்., பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ெஷரிப் நேற்று தெரிவித்தார்.
ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இன்றுக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும்; 1960ல் போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாக்., பிரதமர் ஷெபாஸ் ெஷரிப் நேற்று கூறினார்.
அவர் கூறியதாவது:
பஹல்காமில் சமீபத்தில் நடந்த துயர சம்பவம் என்பது, பாகிஸ்தான் மீது பழி சுமத்தும் விளையாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாகிஸ்தான் எப்போதுமே பயங்கரவாதத்தை, அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்து வருகிறது. பொறுப்பான நாடாக, தன் பங்களிப்பை பாக்., தொடரும்.
அதன்படி, பஹல்காம் தாக்குதலில் எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைக்கும் பாகிஸ்தான் தயாராக இருக்கிறது.
அதே நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக ஏற்படும் எந்த நிகழ்வையும் எதிர் கொள்வதற்கும், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் பாக்., ராணுவம் உள்ளிட்ட ஆயுதப்படைகள் முழு வீச்சில் தயாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இது வெறும் ஆரம்பம் தான்!
பிலாவல் புட்டோவின் பேச்சை கேட்டேன். அவரை தண்ணீரில் எங்காவது குதிக்கச் சொல்லுங்கள். சரி... தண்ணீர் இல்லாத போது, அவர் எங்கு குதிப்பார்? இது போன்ற கருத்துக்களை நாம் மதிக்கக்கூடாது. பஹல்காம் தாக்குதல் என்பது, சந்தேகத்திற்கிடமின்றி பாக்., அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல். பிரதமர் மோடி கூறியது போல், பாக்., அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது வெறும் ஆரம்பம் தான். பாக்., ஒரு முரட்டு நாடு மட்டுமல்ல; வீழ்ச்சியின் கடைசி கட்டத்தில் உள்ள நாடு.
- ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
பாக்., மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகனுமான பிலாவல் புட்டோ சர்தாரி நேற்று பேசியதாவது:சிந்து நதி பாகிஸ்தானுடையது. அது எப்போதும் அப்படியே இருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சிந்து நதியில் தண்ணீரை இந்தியா நிறுத்தினால், அதில் தண்ணீருக்கு பதில், இந்தியர்களின் ரத்தம் பாயும். பழமையான சிந்து சமவெளி நாகரிக நகரமான மொகெஞ்சதாரோவின் உண்மையான வாரிசு இந்தியா அல்ல; பாக்., தான். சிந்து மற்றும் சிந்து நதி மக்களுக்கு இடையேயான பல நுாற்றாண்டு கால பிணைப்பை இந்திய பிரதமர் மோடியால் துண்டிக்க முடியாது. பாகிஸ்தானின் நீர்நிலைகள் மீது இந்திய அரசு கண் வைத்துள்ளது. இதற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை
-
அண்டை நாடு... அண்ட முடியாத எதிரி நாடு...!
-
ஆன்லைனில் ஜெராக்ஸ் மிஷின் வாங்கி கள்ள நோட்டு தயாரித்தவர் கைது
-
வீராணம் ஏரியில் குறையும் நீர் மட்டம்
-
தொழிலாளியை தாக்கி மொபைல் பறித்த மூன்று பேர் கைது