ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து 5 பேர் பலி; 700 பேர் படுகாயம்

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 5 பேர் பலியாகினர்; 700 பேர் காயம் அடைந்தனர்.

மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ளது ராஜேய் துறைமுகம்.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி டன் அளவுக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று இந்த துறைமுகத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் கரும்புகை ஏற்பட்டது.

பல கி.மீ,, தொலைவுக்கு இதன் அதிர்வு உணரப்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து துறைமுகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் சிக்கி, 5 பேர் பலியாகினர்; 700 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

Advertisement