செயல்படாத சுகாதார வளாகம் பகுதிவாசிகள் அதிருப்தி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். பகுதிவாசிகளின் தேவைகளுக்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில், நல்லதண்ணீர் குளம் தெரு, மேல்பொதட்டூர் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுகாதார வளாகங்களை செயல்படுத்தவும் அவற்றை முறையாக சுத்தம் செய்து பராமரிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement