சுதிர்மன் பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

ஜியாமென்: சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய அணி, டென்மார்க்கிடம் வீழ்ந்தது.

சீனாவில், அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. லீக் போட்டியில் இந்தியா, டென்மார்க் அணிகள் மோதின.

கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 13-21, 14-21 என டென்மார்க்கின் ஜெஸ்பர், அமாலி ஜோடியிடம் வீழ்ந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 15-21, 16-21 என டென்மார்க்கின் ஆன்டர்ஸ் அன்டோன்சனிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 20-22, 21-23 என லைன் ஹோஜ்மார்க்கிடம் (டென்மார்க்) போராடி தோல்வியடைந்தார்.

அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரூபன் குமார், ஹரிகரன் ஜோடி தோல்வியடைந்தது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் தனிஷா, ஷ்ருதி மிஷ்ரா ஜோடி 21-13, 21-18 என டென்மார்க்கின் நடாஸ்ஜா, அலெக்சாண்ட்ரா போஜே ஜோடியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
முடிவில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் நாளை இந்தோனேஷியாவை எதிர்கொள்கிறது.

Advertisement