ராணுவத்திற்கு நன்கொடை தருமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலி; மத்திய அரசு எச்சரிக்கை

3

புதுடில்லி: ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் போலியானது, அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.



26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் நிகழ்வு காரணமாக பாகிஸ்தான், இந்திய எல்லைகளில் போர் பதற்றம் நிலவுகிறது. உலகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


இந் நிலையில் இந்திய ராணுவத்திற்கு நன்கொடை வழங்குமாறு வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம், அவை போலியானவை என்று பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதுகுறித்து கூறப்பட்டு உள்ளதாவது;


இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த நன்கொடை தேவை, வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ அவர்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு வாட்ஸ் அப்பில் வருகிறது.


மத்திய அமைச்சரவை ஒப்புதல் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை முன்னிலைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றில் உண்மையில்லை, அனைத்தும் போலி, இதுபோன்ற மோசடியான செய்திகளுக்கு மக்கள் இரையாகாமல் இருக்க வேண்டும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement