முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் ஆலோசனை

8


புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், டில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங்கை நாட்டின் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது அம்பலமானது. இதனையடுத்து, அந்நாடு மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடிஉறுதி அளித்து உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முப்படைகளும் தயார் நிலையில் உள்ளனர்.

இச்சூழ்நிலையில், டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அவரது இல்லத்தில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், பிஎஸ்எப் தலைவர் தல்ஜித் சிங் சவுத்ரி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisement