த.வெ.க., ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை: விஜய் உறுதி

43

கோவை: '' நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும். ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள்'', என கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.

த.வெ.க., கட்சியில் அமைத்துள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு, கோவையில் நேற்று துவங்கியது. கடைசி நாளான இன்றும் கருத்தரங்கு நடந்தது.

தயங்க மாட்டேன்



இந்த கருத்தரங்கில் விஜய் பேசியதாவது: நேற்று பேசும் போது இந்த கருத்தரங்கம் வந்து வெறும் ஓட்டுக்காக நடத்தும் கருத்தரங்கம் இல்லை என்று சொன்னேன். த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்திற்காக துவங்கப்பட்ட ஒரு கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த அளவுக்கும் சென்று அதை செய்ய தயங்க மாட்டோம்.

வெளிப்படையான நிர்வாகம்



நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும்.ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல், தைரியமாக நம்முடைய ஓட்டுச்சாவடி முகவர்கள் மக்களை அணுக வேண்டும்.

மக்களிடம் செல்


Tamil News
Tamil News
மக்களிடம் இருந்து கற்றுக்கொள்


மக்களுடன் வாழ்


மக்களுடன் சேர்ந்து திட்டமிடு


மக்களை நேசி


மக்களுக்காக சேவை செய் என அண்ணாதுரை கூறியுள்ளார். இதை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால், சிறுவாணி தண்ணீர் போன்று சுத்தமான ஆட்சியாக அமையும். இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும என்றால், தவெக ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான ஒரு வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும்.அதனால், இதை நாம் சார்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

முக்கியம்



ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு செல்வதை போல், குடும்பம் குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதை போல், குடும்பம் குடும்பமாக வந்து நமக்கு ஓட்டு போடும் மக்கள் அதனை கொண்டாட்டமாக செய்ய வேண்டும்.

அந்த மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போது த.வெ.க., வெறும் சாதாரண ஒரு அரசியல் கட்சி அல்ல. புரட்சிகரமான பேரணி என்பது புரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடு தான் மிக மிக முக்கியம். நீங்கள்தான் முதுகெலும்பு அதனை மனதில் வைத்து செயல்படுங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.

Advertisement