ஜூனியர் குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்

அம்மான்: ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை பைனலுக்கு 14 இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.
ஜோர்டானில், 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று, 15 வயதுக்குட்பட்டோருக்கான அரையிறுதி போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 52 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரின்சி, கஜகஸ்தானின் பைசுல்லாயேவா மோதினர். அபாரமாக ஆடிய பிரின்சி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான 43 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மில்கி மெய்னாம் 3-2 என, உக்ரைனின் அலினாவை தோற்கடித்தார். மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கோமல் (33 கிலோ), குஷி (35 கிலோ), தமன்னா (37 கிலோ), நவ்யா (58 கிலோ), சுனைனா (61 கிலோ) , ட்ருஷனா மோஹித் (67 கிலோ) வெற்றி பெற்றனர். இந்தியாவின் ஸ்வி (40 கிலோ), வன்ஷிகாவுக்கு (70+ கிலோ) 'பை' வழங்கப்பட்டதால், நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்றனர்.
ஆண்களுக்கான அரையிறுதியில் (15 வயது) இந்தியாவின் சன்ஸ்கர் வினோத் (35 கிலோ), ருத்ராக் ஷ் சிங் (46 கிலோ), அபிஜீத் (61 கிலோ), லக் ஷய் போகத் (64 கிலோ) வெற்றி பெற்றனர்.
மேலும்
-
விமானத்தில் குண்டு மிரட்டல்; கனடா நாட்டு பயணி கைது
-
பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்புக்கு வேண்டும் 'டிஜிட்டல்' மீட்டர்
-
உக்ரைன் மீது 149 ட்ரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா; பேச்சை மீறியதால் டிரம்ப் அதிருப்தி
-
'ஆண்டுதோறும் 14.50 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது'
-
புதிய பஸ்கள் துவக்கம்
-
உத்தவ் - ராஜ் கைகோர்ப்பு முடிவு: எளிதல்ல என்கின்றனர் கட்சியினர்