பயோகேஸ் துறைக்கு ரூ.200 கோடியில் ஒப்பந்தம்

சென்னை:சென்னையில் நடந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான 'ரினியூ எக்ஸ் 2025' கண்காட்சி வாயிலாக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐ.பி.ஏ., தெரிவித்துள்ளது.
இன்பார்மா மார்க்கெட்ஸ் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ரினியூ எக்ஸ் 2025 என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடந்தது. இந்நிகழ்வில் உயிரி ஆற்றல், சூரிய சக்தி, காற்றாலை, ஆற்றல் சேமிப்பு மற்றும் மேலாண்மை துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் பங்கேற்ற விவாதங்கள் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதன் வாயிலாக, பயோகேஸ் துறைக்கு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கிடைத்து உள்ளதாக தொழில்துறை அமைப்பான ஐ.பி.ஏ., எனப்படும் இந்திய பயோகேஸ் சங்கம் தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement