8 வயது சிறுமிக்கு தொல்லை

புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம், மருங்காபுரியை சேர்ந்த 8 வயது சிறுமி, கோவில் திருவிழாவுக்காக தன் பாட்டி ஊரான காரையூர் அருகே கரையான்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தார்.

திருவிழா நடந்த இடத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைக்செட் அமைப்பாளரான முள்ளிப்பட்டியை சேர்ந்த பிரேம்குமார், 29, சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். சிறுமியின் தாய் புகாரில், இலுப்பூர் மகளிர் போலீசார், பிரேம்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement