ஓட்டல், டீ கடைகளில் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துாரிலுள்ள ஓட்டல்கள், டீ கடைகள், பலகார கடைகள் உள்ளிட்டவைகளில் அதிகளவு வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ரஹமத்துல்லாவிற்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதை அடுத்து, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாருக்கு ரஹமத்துல்லா அளித்த புகாரில், நேற்று முன்தினம் போச்சம்பள்ளி, மத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கடைகளில், ஆய்வு செய்து, 22 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement