சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்

சென்னை: சட்டசபையில் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தி மனித கழிவுகளை கொட்டியுள்ளனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். வழக்கு பதிவு செய்யப்படாமலே சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது என்றார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதிலளித்து பேசினார். இரு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் எழுந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
இந்த அரசு யாருக்கும் பயப்படவில்லை.எதுக்கும் அச்சப்படவில்லை. இது(சவுக்கு சங்கர் விவகாரம்) எப்படி அவைக்குறிப்பில் இடம்பெறும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி நீங்கள் வீடியோ (சட்டசபை நிகழ்வுகள் படம்பிடிப்பது பற்றி) ரெக்கார்டு செய்வீர்கள்.
பேசவே கூடாது, நீங்கள் (இ.பி.எஸ்) எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறீர்கள். நீங்களே இதே அவையில் முதலமைச்சராக இருந்த போது அவையில் சொல்லி இருக்கிறீர்கள். எனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பான பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், எதற்காக பயம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது;
எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டது போல நான் பயத்தின் காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ அவைக்குறிப்பில் இடம் பெறக் கூடாது என்பதற்காக சொல்லவில்லை. வேண்டும் என்றால் இப்போது சொல்வேன்... நான் தைரியமாக இந்த வழக்கை சந்தித்த தயாராக இருக்கிறோம். அதை பற்றி கவலைப்படவில்லை.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதையும் பதிவு செய்யுங்கள். நான் சொன்ன பதிலையும் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.






மேலும்
-
வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்
-
காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை
-
சுப்மன் கில், பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் மிரட்டலுக்கு இடையே துவங்கியது கனடா பார்லி., தேர்தல்
-
சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது
-
பொதுக்கூட்ட மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த முதல்வர்