தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஓசூர்: சூளகிரி அருகே சின்னகுதிபாலா கிராமத்தை சேர்ந்தவர் கொண்டப்பா, 55. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் இறந்து கிடந்தார்.

சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். கடந்த, 25 காலை அப்பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்ற கொண்டப்பா, கீழே தவறி விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது விசாரணையில் தெரியவந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement